மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ்
சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது...வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சித்ராவின் சமீப கால நிகழ்வுகள் படத்தின் ட்ரெய்லர் உடன் ஒத்துப்போவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெ.சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu