உலக காசநோய் தினம்-2022: JKKN மருந்தியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக JKKN மருந்தியல் கல்லூரியில் மார்ச் 26, அன்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.
உயிர்கொல்லி நோயான காசநோய் ஆண்டுதோறும் பல மில்லியன் மக்களை கொன்று குவித்து வருகிறது குறிப்பாக, நுரையீரலையும் , தொண்டையையும் நேரடியாக தாக்குகிறது. இந்த நோயின் பாக்டீரியா பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, எச்சில் மூலமாக காற்றில் வேகமாக பரவும். உலகின் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான காசநோயை உலகளாவிய தொற்றுநோயில் இருந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 5ம் ஆண்டு Pharm.D மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். பிரார்த்தனை பாடல் மற்றும் வரவேற்பு உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இணைப் பேராசிரியர் முனைவர் கிஷோர்குமார் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். பேராசிரியர் டாக்டர் விஜயபாஸ்கரன் வரவேற்றார். மேலும் டாட்ஸ் சிகிச்சையின் முக்கியத்துவம், காசநோய் தடுப்பு குறித்தும் பேசினார்.
மாணவிகள் காயத்திரி மற்றும் பத்மபூஜா ஆகியோரால் உலக காசநோய் தின வரலாறு பற்றிய விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, 3ம் ஆண்டு Pharm.D மாணவர்களால் ஸ்கிட் வழங்கப்பட்டது. ஸ்கிட்க்குப் பிறகு, உலக காசநோய் தினத்தின் ஒட்டுமொத்த விளக்கக்காட்சியை மாணவிகள் பவித்ரா மற்றும் வினிதா ஆகியோர் வழங்கினர். இறுதியாக, காசநோய் தடுப்பு குறித்த துண்டு பிரசுரம், முக்கிய பிரமுகர்களால் வெளியிடப்பட்டது. தேசிய கீதத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu