ஜே.கே.கே.என் பல் மருத்துவக் கல்லூரியில் நாளை மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஜே.கே.கே.என் பல் மருத்துவக் கல்லூரியில் நாளை மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
X
ஜே.கே.கே.என் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக மகளிர் தின கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது.

பெண்களின் மகத்தான சாதனைகளைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நாளை ஜே.கே.கே.என் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.

நாளை (29. 03. 2022) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி, N. செந்தாமரை தலைமை தாங்குகிறார்.

கல்லூரி முதல்வர் Dr. சிவகுமார் வரவேற்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், பெண் என்பவள் பிள்ளை பெற மட்டுமா என்ற தலைப்பில், ஊக்கமளிக்கும் பேச்சு மற்றும் புதுமையான ஆடியோ விஷுவல் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. சிறப்பு அழைப்பாளராக Dr. கவிதாகருணாகரன் 'கருப்பை: வரமா சாபமா' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். கல்லூரி இயக்குனர் ஓம் சரவணா வாழ்த்துரை வழங்குகிறார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!