JKKN பல் மருத்துவக் கல்லூரியில் மகளிர்தின கொண்டாட்டம்

JKKN பல் மருத்துவக் கல்லூரியில் மகளிர்தின கொண்டாட்டம்
X
சிறந்த பேச்சாளரான டாக்டர்.கவிதா கருணாகரன் "பெண் வாழ்க்கை சுகமானதா அல்லது சுமையானதா " என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் "அவளை வரையறு" என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடத்தபட்டது.


இந்த நிகழ்ச்சியை JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யலட்சுமி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் சிறந்த பேச்சாளரான டாக்டர்.கவிதா கருணாகரன் "பெண் வாழ்க்கை சுகமானதா அல்லது சுமையானதா " என்ற தலைப்பில் எழுச்சி ஏற்படுத்திடும் உரையை ஆற்றினார்.

அவரது சொற்பொழிவைத் தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து

"அவர் அவளை வரையறுக்கிறார்" - என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கெடுத்து சிறந்த கவிதை வடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!