பெரியார் பல்கலை திறந்தவெளி படிப்பா? எச்சரிக்கை செய்யும் யுஜிசி
இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானியக்குழு எனப்படும் யு.ஜி.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைதூர படிப்பு திட்டங்கள் முழு நேர இயக்குனர், போதிய ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் இன்றி செயல்படுவதாகவும், யு.ஜி.சி. விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாகவும் புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக, புகார் தீர்வு குழுவால் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில், தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தில், உயர்கல்விக்கான எந்த விண்ணப்பமும் பரிசீலனை செய்யப்படாது. திறந்த மற்றும் தொலைதூர கல்வித்திட்டங்களை வழங்குவதற்காக உயர்கல்வி நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் செயல்படுத்தப்படவில்லை.
எனவே, மாணவர்கள் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் திறந்த மற்றும் தொலைதூர கல்வியில் வழங்கும் எந்தவொரு திட்டத்திலும் சேரவேண்டாம். பல்கலைக்கழக மானியக்குழுவால் கல்வித்திட்டங்களுக்கு அங்கீகாரம் பெறாததால், இதுபோன்ற திட்டங்களில் சேருவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu