திருச்சியில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் சார்பில் மாணவ மாணவிகள் உறுதி ஏற்பு

திருச்சியில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் சார்பில் மாணவ மாணவிகள் உறுதி ஏற்பு
X

திருச்சியில் வாசிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர்.

திருச்சியில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் சார்பில் மாணவ மாணவிகள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை, பழக்க வழக்கங்களள் மாறி வருகிறது. இந்த மாற்றத்திற்கு நமது நாடும் விதி விலக்கு அல்ல. உணவு முறை, வாழ்க்கை முறைக்கு ஏற்ப தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களிடம் புத்தகம் மற்றும் செய்தி தாள்கள் படிக்கும் பழக்கமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

நாளிதழ் செய்திகளை கூட இன்றைய இளைஞர்கள் இணையத்தின் வழியாக தங்களது ஸ்மார்ட் செல்போன்களில் தான் படித்து தெரிந்து கொள்கிறார்கள். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையினருக்கு வாசிப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும். இந்த நிலை ஏற்பட்டு விடாமல் தடுப்பற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக செய்தித்தாள் வாசிப்பு முகாம்இன்று நடைபெற்றது. இதை சமூக ஆர்வலர் வாணிஶ்ரீ உறுதிமொழி வாசித்து தொடங்கிவைத்தார்.

சமூக ஆர்வலர் வாணிஶ்ரீ இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு உறுதிமொழி வாசிக்க "செய்தித்தாள்களை தினமும் வாசிப்போம்" என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஹோமியோபதி மருத்துவர் பாலசுப்ரமணியன், மற்றும் பல நகர் நலச் சங்க நிவார்கிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் இன்று வினாடி வினா போட்டி நடைபெற்றது. வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil