ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
ஈரோடு மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 5 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் சிறப்பை பெறுகின்றன. இந்த தரவரிசை கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதி, பணிசெய்யும் ஆசிரியர்களின் தரம், வளாக வேலை வழங்கும் நிறுவனங்கள் போன்றவைகளின் அடிப்படையில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விபரம்.
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, குமாரபாளையம்
ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பாடப்பிரிவுகள் உள்ளன
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது
தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நிர்வாகம் மற்றும் மாணவர்கள் திறன்களை வளர்க்கும் சிறந்த கல்லூரியாக விளங்குகிறது.
கொங்கு பொறியியல் கல்லூரி
ஈரோடு பெருந்துறையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சிப் பொறியியல் கல்லூரி ஆகும்
தனியார் பொறியியல் கல்லூரியில் நடுத்தர மாணவர்களுக்கு கட்டணம் ஓரளவு எதிர்கொள்ளும் அளவாக இருக்கும். இந்த கல்லூரியும் நல்ல சூழலில் அமைந்துள்ளது.ஈரோட்டில் சிறந்த கல்லூரியாக திகழ்கிறது.
அரசு பொறியியல் கல்லூரி, சித்தோடு, ஈரோடு
இது தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தால் துவங்கப்பட்டது. தற்போது தமிழக அரசால் நேரடியாக ஏற்று நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் முதலாம் வகை கல்லூரிகளின் கீழ் இது பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழில்நுட்பத்துறையின் கீழ் நடத்தப்படும் பொறியியல் கல்லூரி. சிறந்த அனுபவம் உள்ள பேராசிரியர்கள். அரசு பொறியியல் கல்லூரிகளில் இது சிறப்பாக செயல்பட்டு சிறந்த கல்லூரியாக விளங்குகிறது. சிறந்த பொறியியல் படிப்புக்கான இடம்.
வெள்ளாளர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி,திண்டல், ஈரோடு.
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[ இக்கல்லூரி 2001இல் தொடங்கப்பட்டது.
காற்றோட்டமுள்ள பகுதியில் பெரிய வகுப்பறைகள், நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நிர்வாகம், எதிர்கால மாணவ திறன்களை வளர்க்கும் சிறந்த கல்லூரியாக விளங்குகிறது.
நந்தா பொறியியல் கல்லூரி, ஈரோடு பெருந்துறை சாலை, வாய்க்கால் மேடு, ஈரோடு
2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது
இந்த கல்லூரியிலும் குறைவான கட்டணம் வாங்கப்படுகிறது. உட்கட்டமைப்பு நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உலகளாவிய இதழ்களும், IEEE எனப்படும் உலகளாவிய பொறியியல் வல்லுநர்களுக்கான கூட்டமைப்பின் இணையதளச் சேவையும் உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu