10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 91.39% பேர் தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 91.39% பேர் தேர்ச்சி
X

கோப்புப்படம் 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16%

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட உள்ளன.

91.39 % மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி

  • மாணவியர் தேர்ச்சி விகிதம் - 94.66%
  • மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 88.16%
  • மாற்றுத்திறனாளிகள் - 89.77%
  • சிறைவாசிகள் - 42.42%

அரசு பள்ளிகள் - 87.45% அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 92.24%


10-ம் வகுப்பு தேர்ச்சி - டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

  1. பெரம்பலூர் - 97.67%
  2. சிவகங்கை - 97.53%
  3. விருதுநகர் - 96.22%
  4. கன்னியாகுமரி - 95.99%
  5. தூத்துக்குடி - 95.58%

பாட வாரியான தேர்ச்சி விகிதம்:-

  • தமிழ் - 95.55%
  • ஆங்கிலம் - 98.93%
  • கணிதம் - 95.54%
  • அறிவியல் - 95.75%
  • சமூக அறிவியல் - 95.83%

100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்:-

  • ஆங்கிலம் – 89
  • கணிதம் - 3,649
  • அறிவியல் - 3,584
  • சமூக அறிவியல் - 320

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு