10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
X
தமிழக 10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதியும் நடைபெறும் எனவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். கடந்த 2019 - 2020, 2020- 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மதிப்பெண்கள் தெரிவிக்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகளும் மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.


பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "2022-2023ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவித்தார்,

மேலும், மாநிலம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள், 3,986 மையங்களில் எழுத உள்ளனர். அதேபோல், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் , 3,169 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ , மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 10, 12ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணையை 2023ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself