சிபிஎஸ்இ முதல்பருவ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்கும்

நாடு முழுவதும் நடக்கும் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

நாடு முழுவதும் நடக்கும் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான உள்ளது. கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அந்தச் சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் இரண்டு பருவத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி 2021-2022-ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ சார்பில் பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டது. ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப் பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித்தாள்களும், மாற்றியமைக்கப் பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் நடக்கும் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் cbse.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும்.

பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலை, ஏற்கெனவே பள்ளிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளன. தேர்வு 90 நிமிஷங்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!