ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்–பள்ளிக்கல்வித்துறை
ஆகஸ்ட் 2 முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, அசைன்மென்ட் மதிப்பீடு பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கால அட்டவணை தயாரித்தல், பாடப்புத்தக விநியோக பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன
அனைத்து ஆசிரியர்களும் 02.08 2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் என ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2021-22 கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கை பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மாணவர்கள் சேர்க்கை பணி, பள்ளிக்கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் மற்ரும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மெற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தெதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் மட்டும் உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu