எதிர்கால இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள்....ஆசிரியர்கள் .....படிங்க....

Teacher Kavithai Tamil
X

Teacher Kavithai Tamil

Teacher Kavithai Tamil-மாதா, பிதா,குரு, தெய்வம் என்ற வரிசையில் ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்குஅடுத்த ஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளதில் இருந்தே ஆசிரியர்கள் என்பவர்கள் போற்றப்படக்கூடியவர்கள்.


Teacher Kavithai Tamil-ஆசிரியர் என்பவர் பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையாக கல்வியை போதிக்கும் பணிகளைச்செய்பவர். அரசுப்பள்ளி, தனியார்பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்டவைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

சாதி, மதம், இனம் எதையும் பாராமல் அனைத்து மாணவர்களையும் ஒரு சேர அமர வைத்து அவர்களுக்கு தேவையறிந்து புரியும் வகையில் பாடங்களைப்போதித்து கற்றல் பணியில் சிறக்க செய்பவர்கள் ஆசிரியர்கள் .

ஒரே பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே எந்தவித வேற்றுமையும் காணக்கூடாது என்ற ஒரே அடிப்படைக் கருத்தால் கல்விக்கண் திறந்த மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்கள் சீருடைத்திட்டத்தினைக் கொண்டு வந்தார். அதுபோல் மாணவ, மாணவிகளிடையே எந்தவித பேதம் காட்டாமல் அனைவருக்கும் ஒரு சேர ஒரே மாதிரியான கற்றல் பணிகளை இன்றளவில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று உயர்ந்த பதவி வகிப்போர் பலரும் அவரவர்களுக்கு போதித்த ஆசிரியர்களில் ஒருவராவது இவரை இந்த நிலைக்கு கொண்டு வர ஊக்கப்படுத்தியிருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் நன்கு படிக்கும் மாணவன், படிக்காத மாணவன் என்று பேதம் பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கற்றல் பணிகளை மேற்கொள்வதோடு கல்வி சரிவர கற்காத மாணவ, மாணவிகளை அறிந்து அவர்களுக்கு தனிப்பயிற்சி அளித்து அவர்களையும் கற்றலில் சிறக்க செய்யும் வல்லமை பொருந்தியவர்கள்தான் ஆசிரியர்கள்.

சுயநலமில்லாதவர்கள் ஆசிரியர்கள். மற்ற எந்த வேலையைக் காட்டிலும் ஆசிரியர் பணியே அறப்பணி என தொண்டு செய்யும் நோக்கில் ஒரு சில ஆசிரியர்கள் பெரும் சேவைகளை இன்றளவில் செய்து வருவது இப்பணிக்குரிய சிறப்பாகும். அதுவும் ஏழை மாணாக்கர்களை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தரும் ஆசிரியர்களை அந்த மாணவர்கள் தன் வாழ்வில் மறந்துவிட மாட்டார்கள்.

கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள் வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு ஆகியவை வடமொழிச்சொற்களாகும். இதற்கு இணையான தமிழ் சொல் ஆசிரியர் என்பதாகும். வாத்தியார் என்பது பேச்சுவழக்கு சொல்லாகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம்... இந்த வார்த்தைகளில் தாய்,தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் ஆசிரியரை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மேன்மையான குணங்கள் பொருந்தியவர்கள்தான் ஆசிரியர்கள். தன்நலன் பாராமல் மாணவர்களின் எதிர்காலம் கருதி, முகம் சுளிக்காமல், வருத்திக்கொள்ளாமல் கல்விச் சேவையை செய்பவர்கள்தான்ஆசிரியர்கள்.

நம்மைச் சீராட்டி பாராட்டி வளர்த்தவள் அன்னைஉலகில்சிறந்தவர்களாக ஆக்கியவர்கள் ஆசான்..நம்முள் நம்பிக்கை விதை விதைத்த ஆசானேஉன்னை வணங்குகிறேன்.. என் எதிர்காலம்சிறக்க உங்களின் அறிவுரைகளே காரணம்..

கற்றலின் மீது காதலை ஏற்படுத்தியவரேஉங்களின் கற்பிக்கும் நடை என்னால் மறக்கமுடியவில்லை என்னையும் சமூகத்தில் உருவாக்கியவரே...நன்றிகள்..

மாணவர்களின் மனதறிந்து போதிக்கும் வல்லமைஉடைய ஆசான்களே... வாழ்க...வளமுடன்...

கடிந்து கொள்ளாமல் இன்முகம் காட்டி எங்களைவழிநடத்திய எங்கள் ஆசான்களுக்கு நன்றிகள்...

கற்பித்தலில் உங்களை யாரும் ஜெயித்துவிட முடியாது..காரணம் நீங்கள் கற்பித்தலில் வல்லவர்கள்..நல்லவர்கள்..

கல்விச்சாலை என்ற தோட்டத்தில் செடிகளாகிய மாணவர்களுக்கு காப்பானாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்...

சுயநலம் பாராத குணம், எப்போதும் உதவிடும்இரக்கம், புன்முறுவல் பூத்த முகமே நீங்களே வழிகாட்டி.. எங்களுக்கு... எப்போதும்... ஆசானே...

கல்விச்சாலைகள் அனைத்தும் கற்றல் பணிகளை மட்டும் வழி நடத்துவதில்லை... ஆசான்கள் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் நமக்கு ஊட்டுகின்றனர்..

ஒழுக்கம்,பணிவு, நன்னடத்தை இவையனைத்தும் பாடத்தோடு பயின்றவர்கள் நாங்கள்... எங்கள் ஆசானால்..

சாதி, மத,இன பேதமின்றி அனைத்து மாணவர்களிடமும்பரிவு காட்டும் குணம் கொண்டவர்கள் ஆசிரியர்களே...

. கற்பித்தல் ஒரு கலை.. அதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள்..கற்றலை யார் உணரவில்லை என்பதை அறிவதில் நீங்கள்

கில்லாடி... அவர்களையும் கண்டறிந்து போதிக்கும் திறன்உங்களுக்கு மட்டுமே உண்டு... ஆசான்களே...

பெற்ற தாய்க்கு கூட தெரியாது அடுத்த நிமிடம்தன் பிள்ளை என்ன செய்யப்போகிறான் என்று ...

ஆனால் ... அவனுக்கு போதிக்கும் ஆசிரியர் .அதனை உடனறிந்து... தக்கவாறு நடவடிக்கை எடுப்பார்...

அ...முதல்.... ஃ வரை... ஆசிரியர்கள்.... பற்றியது...

ன்பால் அனைவரையும் அரவணைத்து செல்பவர்களே...

ழ்ந்த சிந்தனைத் திறனை ஊட்டியவர்களே...

ன்முகம் காட்டி இனிமையோடு கற்பிப்பவர்களே...

கைக் குணத்தையும் பாடத்தோடு போதித்தவர்களே...

ள்ளத்தினை(மாணவர்களின்) முழுமையாக உணர்ந்தவர்களே...

ராரும் பாராட்டும்படிகற்றலில் கைதேர்ந்தவர்களே...

ப்படி இருந்தால் எதிர்காலம் சிறக்கும்என உணர்த்தியவர்களே....

ழை, பணக்காரன் வித்தியாசம் காட்டாதவர்களே....

யத்தினை (பாடத்தின் ) உடனடியாக நிவர்த்திப்பவர்களே...

ன்றுபட்டால்தான் வாழ்வு என ஒற்றுமைக்கு வித்திட்டவர்களே...

தாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என போதித்தவர்களே...

ஒளவையைப் போல் அறிவுரைகளை தந்தவர்களே...

எஃகு போன்று மனஉறுதியை தந்தவர்களே...

வாழ்த்துகிறோம்...உங்களை என்றென்றும்... நாங்கள்..

ஒவ்வொரு ஆசிரியருமே மாணவர்களின் வாழ்க்கை எனும் விளக்கை ஏற்றிய துாண்டுகோல்களே....

புரியாத மாணவர்களுக்கு புரிய வைத்து தேர்வு பெறச் செய்யும் மனப்பாங்கு ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு...

தாம் பெற்ற அறிவினை மற்றவர்களுக்கு பேதம் பாராமல் வழங்குபவர்களே உண்மையான ஆசிரியர்கள் .....

எதிர்கால இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்தசிற்பிகள்தான்... ஆசிரியர்கள்... மாணவர்கள்...துாண்கள்...

மாணவனின் எதிர்காலம் சிறக்க அவ்வப்போது அளிக்கும் போதனைகளே மாணவர்களின் சாதனைகளாகிறது என்பதை மறுக்க முடியுமா... . ஆசான்களே...

குட்டுப்பட்டாலும் மோதிரக் கைகளால் குட்டுப்படு என்று சொல்வார்கள்...ஆம்.. நாங்கள் எல்லாம் எங்களுடைய ஆசான்களால் குட்டுப்பட்டதால்தான் இன்று மிளிர்கிறோம் எங்களுடைய சுகமான வாழ்க்கையிலே....

.பெற்றோர்களுக்கு தன்னுடைய பிள்ளைகளின் மனதில் என்னநினைக்கிறார்கள் என்று தெரியாது... ஆனால் போதிக்கும் ஆசிரியர்கள் அதனை அறிவார்கள்... அந்த அளவிற்கு பற்றுதலும்... கண்காணிப்பும் உண்டு....

சிவப்பு மை பேனாக்களினால் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தினை படைக்கும் பிரம்மாக்களே ஆசிரியர்கள்...

அறிவு தாகத்தினை தீர்க்கும்அருவிகள்தான் ஆசிரியர்கள்...

நிலவு எப்படி பரந்த ஒளியை வானில் தருகிறதோ? அதுபோல் தன்னறிவை அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளல்கள் ஆசிரியர்கள்.... அறிவுச் சொற்களால்....

வாழ்க்கை என்னும் மாடியில் மாணவர்கள் ஏறிடஏணிப்படிகள்தான் ஆசிரியர்கள்... ஆசான்கள்...

கற்றலில் தோல்விகண்டவர்களைள் கண்டறிந்து அவர்களையும் மேன்மையானவனாக்கும் ஆற்றல் ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு...

பெற்றவர்கள்... மற்றவர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் மாணவ சமுதாயத்தின் மேல் தனிப்பட்ட அக்கறை செலுத்துவது ஆசிரியர் சமுதாயமே... மாற்றுக்கருத்தில்லை..

வணங்குகிறோம்... ஆசானே...வாழ்க ... வளமுடன் என்று வாழ்த்த வயதில்லை...வணங்குகிறோம்.. வணங்குகிறோம்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story