உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பணிந்தார் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர்.என். ரவி. ஓய்வு பெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரியான இவர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதா உள்பட தமிழக மக்கள் தொடர்புடைய பல மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
மேலும் தமிழக அரசு பற்றி அவர் பொது மேடைகளில் விமர்சனம் செய்து வந்துள்ளார். சனாதனத்துக்கு ஆதரவாகவும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது போன்ற ஆளுநரின் செயல்களால் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றிய போது அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து ஆளுநர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது போன்ற காரணங்களால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
இதற்கிடையில் தமிழக பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக அனுப்பிய தமிழக அரசின் பரிந்துரைகளுக்கும் அவர் ஒப்புதல் வழங்கவில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக துணை வேந்தர் தேடுதல் குழுக்களையும் தமிழக ஆளுநர் நியமித்தார்.
இப்படி மோதல் போக்கு ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நீண்டு கொண்டு இருந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு சில அறிவுரைகளை வழங்கியது. மாநில நலன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முதல்வரும் ஆளுநரும் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என கூறியிருந்தது .
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் அழைப்பின் பேரில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது இருவரும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையை தொடர்ந்து தற்போது மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் தேடுதல் குழுக்களை நியமித்த ஆளுநர் தனது உத்தரவை திரும்ப பெற்று இருக்கிறார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று இசெய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அரசியலமைப்பு நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு இணங்க, யுஜிசி [பல்கலைக்கழக மானியக் குழு] தலைவர் நியமனம் உட்பட, அரசாங்கம் இப்போது தேடல் குழுக்களை அமைக்கும் என்று கவர்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜ்பவன் தகவல் தொடர்பு வந்த சில நாட்களுக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் ஆளுநர் ஆர்.என். ரவி, ராஜ்பவனில், சுப்ரீம் கோர்ட்டு அறிவுரையின்படி, மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார
தமிழக ஆளுநர், தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற வகையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்த யுஜிசியின் வழிகாட்டுதலுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு விதிகளைக் கொண்டுவரும் என்று நம்புகிறார். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின், யுஜிசி விதிமுறைகளுக்கு ஏற்ப பொருந்தும் என்றும்,
தமிழக கவர்னர், "தமிழக அரசு சுட்டிக்காட்டியபடி தேவையானதை செய்யும் என்ற நம்பிக்கையில்" இருப்பதால், அவர் அறிவிப்புகளை திரும்பப் பெற்று, "இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து உரிய நடவடிக்கையை விரைவில் எதிர்பார்த்து அதற்கான காரணத்தை உறுதி செய்தார். இதனால் மாநிலத்தில் உள்ள பல லட்சம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu