11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
X
Today Result 11th Class - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதிய 11ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

Today Result 11th Class -தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

இந்நிலையில் 11ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. 3,119 மையங்களில் நடைபெற்ற தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேரும் எழுதினர்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் .

அத்துடன் மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கும் தேர்வுமுடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்