கனவு காணுங்கள்.... அது லட்சிய கனவாக இருக்கட்டும்.....


Abdul Kalam Quotes in Tamil Images-அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் ராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார்.
பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.
சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய ராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ்.எல்.வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 இல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது

அப்துல் கலாம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். அவர் 2002இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 1,07,366 வாக்குகளைப் பெற்ற லட்சுமி சாகலை, 9,22,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 25 ஜூலை 2002 முதல் 25 ஜூலை 2007 வரை பணியாற்றினார்,
10 ஜூன் 2002 இல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார்.
18 ஜூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
15 ஜூலை 2002 இல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 18 ம் தேதி நடைபெற்றது. கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். சூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார்.
அப்துல்கலாமின்பொன்மொழிகள்....
நாம் அனைவருக்கும்ஒரே மாதிரி திறமைஇல்லாமல் இருக்கலாம்.ஆனால்,அனைவருக்கும் திறமையைவளர்த்துக் கொள்ள ஒரேமாதிரி வாய்ப்புகள்
உள்ளன.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல…உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…
ஒரு முறை வந்தால் அது கனவு.இரு முறை வந்தால் அது ஆசை,பல முறை வந்தால் அது லட்சியம்.
உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே…
ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
அழகை பற்றி கனவு காணாதீர்கள்!அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்,அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்!
கனவு காணுங்கள்!ஆனால் கனவு என்பதுநீ தூக்கத்தில் காண்பது அல்ல..உன்னை தூங்க விடாமல்
செய்வதே (இலட்சிய) கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்!எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்!

கஷ்டம் வரும் போதுகண்ணை மூடாதே,அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,அதை வென்றுவிடலாம்.
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால்
அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்!
ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ, பணமோ அல்ல!
அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் அழகு
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்
அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை.சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும்.
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையேபடிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே,உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்,வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்!எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்!
எனவே நற்செயலே நன்மை தரும்!
ஒரு முட்டாள் தன்னை முட்டாள்என்று உணரும் தருணத்தில்புத்திசாலியாகின்றான்.ஆனால்,ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலிஎன்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்முட்டாளாகின்றான்.
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

ராமேஸ்வரம் பேய் கரும்பிலுள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் (கோப்பு படம்)
ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.மாணவர்கள் கேள்விகள் கேட்கட்டும்.
குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில்,அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அவர்களைஎல்லோரையும் போல் காட்ட எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது.
வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் தொடங்கும் என்பதால்முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.
வாய்ப்புக்காக காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்…
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால்.. நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.. நீ நீயாக இரு..!
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியம்) கனவு..
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை
இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.
வெற்றி உன்னிடம்..! கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.. அது உன்னை கொன்றுவிடும்.. கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்..!
நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்து கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன..!
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை – நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம் – சாதியுங்கள், ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள், ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்
அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu