பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் விநியோகம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் விநியோகம்
X
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஹால்டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்-அரசுத்தேர்வுகள் இயக்ககம்

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் ஹால்டிக்கெட்டுகளை இன்று பகல் 2 மணி முதல் dge.tn.gov.in இணையதளத்தில் செய்துகொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்து, தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை இன்று மதியம் 2 மணி முதல் dge.tn.gov.in என்ற பள்ளிக்கல்வித்துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
ai powered agriculture