தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்
X
12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் https://t.co/Uz9mVMb34M மற்றும் https://t.co/dClavdo2yx என்ற இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. அப்போது, கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்ததால் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்ணை தசம முறையில் வெளியிட முடிவானது.

இதில், மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களின் மதிப்பெண்களில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் பட்டியலுடன் கூடிய முடிவு வெளியிடப்பட்டது. மொத்தம் 8,18,473 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,858 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் https://t.co/Uz9mVMb34M மற்றும் https://t.co/dClavdo2yx என்ற இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Tags

Next Story