பள்ளி மாணவர்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்த சமூகப்பாதுகாப்புத்துறை
மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சமூக பாதுகாப்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,
- மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.
- மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.
- தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும் கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும்.
- தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.
- காலில் காலணி அணிய வேண்டும்.
- மாணவர்கள் 'டக் இன்' செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
- பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
- பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும்.
- பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.
- மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருச்சக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.
- வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.
- ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.
- மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.
- வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
- அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.
- மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்ல வேண்டும்.
- மாணவ மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு Tattoo போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை .
- மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது.
- வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறியக் கூடாது.
- மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்றவற்றை அணிய கூடாது.
- மாணவ மாணவியர்கள் உடற்பயிற்சிவகுப்பின்போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.
- ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவ மாணவியர்களுக்கு நல்லொழுக்கக் கதைகள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிநெறி கதைகள்
தெனாலிராமன் கதைகள் .
காப்பிய கதைகள்
நாட்டுப்பற்றை ஊட்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள்
அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல், மதிப்புகளை வளர்த்தல், அனுகுமுறைகளும் உத்திகளும் மாணவ மாணவியர்களிடையே ஊக்குவித்தல்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடையிலான உறவுமுறைகளை மேம்படுத்துதல்.
மாணவ மாணவியர்களிடையே சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
மாணவ மாணவியர்களின் குடும்ப உறவுமுறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
ஆகிய தலைப்புகளில் நன்னெறி பண்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu