தமிழகத்தில் பிப். 1 முதல் 20 வரை ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்

தமிழகத்தில் பிப். 1 முதல் 20 வரை ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்
X
பிப். 1 முதல் பிப். 20 வரை ஆன்-லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், வரும் பிப்ரவரி 1, முதல், 20,ஆம் தேதி வரை கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். அதே நேரம், கல்லூரி இறுதியாண்டு மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள், சுழற்சி முறையில் நேரடியாக நடத்தப்படும் என்றார்.

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிர் தேர்வு நடத்தப்படும் என்ற அவர், பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றார்.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; பிப்ரவரி 20,ஆம் தேதிக்கு பிறகு, கொரோனா பரவல் சூழலைக் கொண்டு, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Tags

Next Story