தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு
X
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் வரும் 30ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. அதேபோல், 1- 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிந்து, தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர்.

இந்த சூழலில், வரும் 2022 - 23ம் கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளிகள் துவங்குவது குறித்த அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

அப்போது, வரும் கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகளின் விவரம், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை உள்ளிட்ட விவரங்களும் வெளியாகிறது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு