தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
X
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடந்து முடிந்து , மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோருக்கு மட்டும் வரும் 30ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், வரும் 2022- 23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 11ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு ஜூன் 27ம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளன. மேலும், 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ல் வகுப்புகள் திறக்கப்படும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், 2023 ஆம் ஆண்டு மார்ச் 13 -ஆம் தேதியும், 2023 மார்ச் 14 -ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வும் தொடங்குகின்றன. 2023 ஏப்ரல் 3 -ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டில் வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் அறிவிதுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!