பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்க, அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. எனினும், ஒமிக்ரான் பரவலால், பொங்கல் விடுமுறைக்கு பின்னர், ௧௦ - 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வரும் 31ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி முதல், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

எனினும், ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, பள்ளிகளை திறப்பது குறித்து, முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture