தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்:  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
X
தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்தது.

தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அதற்கான வழிமுறைகள் வெளியாகும்வரை ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare