சார்பட்டா பரம்பரை வரலாறு | sarpatta parambarai history in tamil
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு காட்சி - sarpatta parambarai history in tamil
சார்பட்டா பரம்பரையின் மையம் என்று, சென்னை இராயபுரம், பனைமரத்தொட்டி பகுதிகள் சொல்லப்படுகிறது. அதென்ன சார்பட்டா பரம்பரை? தற்போது புழகத்தில் கிளப், அகாடமி போன்ற வார்த்தைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அந்த காலத்தில் இதையே, பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது, எப்படி ஒரு விளையாட்டு வீரருக்கு அடித்தளத்தைக் கற்றுக்கொடுத்து, அவரை ஒரு புரொஃபஷனல் வீரராக மாற்றும் கடமை அந்த க்ளப்பிற்கும் அகாடமிக்கிற்கும் இருக்கிறதோ, அந்தக் கடமைதான் இந்தப் பரம்பரைக்கும் இருந்திருக்கிறது.
வடசென்னை பகுதியில் ஒருகாலத்தில் கோலோச்சிய இந்த 'சார்பட்டா பரம்பரை', காலப்போக்கில் 'சல்பேட்டா பரம்பரை' என்றானது. சார்பட்டா பரம்பரை மட்டுமின்றி, மேலும் பல பரம்பரைகள் வடசென்னையில் ஆக்ரோஷமாகப் பயிற்சியெடுத்து பாக்ஸிங் களத்தில் மோதியுள்ளன.
அவற்றில் முக்கியமானவை, 'இடியப்பன் நாயக்கர் பரம்பரை', 'எல்லப்பச் செட்டியார் பரம்பரை', 'கறியார பாபுபாய் பரம்பரை' உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். இவையெல்லாம் குடும்பப் பரம்பரைகள் அல்ல; பாக்சிங் கற்றுத்தரும் பரம்பரை; அதாவது பயிற்சி மையங்கள் என்றே சொல்ல வேண்டும்.
மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு (footwork), நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை, முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர். முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் "திராவிட வீரன்" என்ற பட்டத்தை தந்தை பெரியார் அவருக்கு சூட்டினார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் பிரபலமாக இருந்த இந்த பாக்ஸிங், சில சிக்கல்களையும் ஏற்படுத்தின. இதில் கைதேர்ந்தவர்களில் சிலர், ரவுடியிசத்திலும் ஈடுபட்டனர்; அதுவே இந்த விளையாட்டுக்கு எமனாகவும் மாறியது. இதுதவிர, போட்டிகளில் தோற்ற அணியினர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வன்முறையில் இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இத்தகைய காரணங்களால், 1989ஆம் ஆண்டு இந்த ஆட்டத்தை நடத்த, அரசு தடை விதித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu