அகந்தை உண்டானால் உண்டாகும் அடங்கினால் ,,அடங்கிவிடும்-ரமணமகரிஷி

Ramanar Quotes in Tamil
Ramanar Quotes in Tamil

ரமண மகரிஷி 1879 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி பிறந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.
இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன் ஆகும். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த சித்தப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.

திருவண்ணாமலையிலுள்ள ரமாணஸ்ரம முகப்பு தோற்றம் (கோப்புபடம்)
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறி 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாதாள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். அங்குச் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளிலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் அன்பர்களின் மூலம் காத்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், மாமரக் குகை, குருமூர்த்தம் எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு "இரமண மஹரிஷி" எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.
கையில் ஏற்பட்ட கொடிய சார்கோமா புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். 1950இல் ஏப்ரல் 14 1950 ல் மறைந்தார்.
ரமண மகரிஷியின் உபதேசங்கள்....
தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு மற்றவனைப்பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு
அகந்தை உண்டானால் எல்லாம் உண்டாகும் அது அடங்கினால் எல்லாம் அடங்கும்
எது வருகிறதோ வரட்டும்எது போகிறதோ போகட்டும்
எது நிலையாக நிற்கிறதுஎன்பதை கண்டுபிடியுங்கள்
நான் யார் என்பது மந்திரம் இல்லைஅது நம்மில் எங்கு உதிக்கிறதுஎன்பதைக் குறிக்கிறது
எல்லா எண்ணங்களுக்கும்மூலம் அதுவே.

கடந்த காலமோ எதிர்காலமும் கிடையாதுநிகழ்காலம் மட்டுமே உண்டு.
தன்னை உணர்ந்தவனால் மட்டுமேஇந்த உலகத்தை உணர முடியும்ஒருவருடைய மனதில்அமைதி இருந்தால்இந்த உலகமே அவனுக்குஅமைதியானதாக தோன்றும்
உன்னைத் தேவையில்லை என்றுஒதுக்கிய நபர்களுக்கு நீ எதைச் செய்தாலும்அது அவர்களுக்கு தவறாகத்தான் தெரியும்
மகிழ்ச்சி என்பது இயல்பு தான்அதை அடைய நினைப்பதில் தவறு இல்லை ஆனால் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே இருக்கிறதுஎன்பதை மறந்து விட்டு அதனை வெளியேதேடுவது மிகவும் தவறுனானது.
எப்போதும் நீங்கள் என் முன் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை சரியாக வழிநடத்தும்.
உலகம் உங்களுக்கு வெளியே இல்லை.
அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றி அடைவான்.
நீங்களே உங்களை யார் என்று உணர்தல் தான் இந்த உலகிற்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய சேவையாகும்.
எண்ணங்களை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் அதன் மீது ஆர்வம் காட்டுவதை நிறுத்துங்கள். இதுதான் எண்ணங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி.

எண்ணங்கள் வந்துபோகும். உணர்வுகள் வந்து போகும். எது நிலைத்து இருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள்.
கடந்த காலமோ அல்லது எதிர்காலமும் கிடையாது. நிகழ்காலம் மட்டுமே உண்டு.
எல்லாம் ஞானத்தின் முடிவும் 'அன்பு' என்ற ஒன்று மட்டுமே!
அமைதி உண்மையானது. அமைதி பேரின்பம் ஆனது. எனவே அமைதியே சுயமானது.
எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும். எனவே நிகழ்காலத்தில் வாழுங்கள்.
ஒருவருடைய மனதில் அமைதி இருந்தால், இந்த உலகமே அவனுக்கு அமைதியானதாக தோன்றும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu