செய்முறை தேர்வு தேதி மாற்றம்: பள்ளி கல்வித்துறை

செய்முறை தேர்வு தேதி மாற்றம்: பள்ளி கல்வித்துறை
X
10ம் வகுப்பு, பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 11,12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதன்படி பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் எனவும் ஏற்கெனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

அதுபோல 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!