பாலிடெக்னி கல்லூரி சேரப்போகிறீர்களா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பாலிடெக்னி கல்லூரி சேரப்போகிறீர்களா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
X
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை குறித்த தேதியை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் 1- 9 வரையிலான வகுப்புகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 30ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், பாலிடெக்னி கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் அளிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், தமிழகத்தில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்றார்.

அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்ற அவர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

பொறியியல் படிபுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுக்குப் பின்னர் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!