வரும் 19-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்-பள்ளி கல்வித்துறை
பள்ளி கல்வித்துறை
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12-ம் மாணவர்களுக்கு,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியானதையடுத்து, தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19 ம் தேதி 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிண தேர்வு முடிவுகளை கீழே குறிப்பிட்டுள்ள இணைய தளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் நம்பருக்கும் தகவல் அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள் வரும் 22 ம் தேதியன்று காலை 11 மணியளவில் www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in என்ற இணைய தளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu