/* */

ஏப்ரல் 1 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 22) முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

HIGHLIGHTS

ஏப்ரல் 1 முதல்  பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
X

தேர்வெழுதும் மாணவிகள் (கோப்பு படம்)

தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்றுடன் முடிந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நேற்று முடிவு பெற்ற நிலையில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்துத் தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி முடிந்த நிலையில், இன்று (மார்ச் 23-ம் தேதி) முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன.

2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து திட்டமிட்டபடி மே 6-ம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

11ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 March 2024 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...