10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் தகவல்

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?  அமைச்சர் மகேஷ் தகவல்
X
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை, கோட்டூர்புரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றார்.

தமிழகத்தில், பழைய பள்ளிக் கட்டிடங்களைக் கண்டறிவதிலும், பள்ளியில் நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுப்பதில் அரசு முன்னுரிமை தந்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், பாலியல் துன்புறுத்தல்களை 14417 என்ற புகார் எண்ணில், பள்ளி மாணவர்கள் தெரிவிக்கலாம் என்றார்.

Tags

Next Story
ai marketing future