பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8,36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10 முதல் 21 வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து மே 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு மே 8-ந்தேதி (இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிட்டார்.
9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 10.00 மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)
மாணவியர் : 96.38%
மாணவர்கள் : 91.45%
சிறைவாசிகள் : 79 பேர்
மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி
விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி
விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது
அரசுபள்ளிகளில் 96.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது
தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக தேர்ச்கை பெற்றவர்கள்
- இயற்பியல் 97.76
- வேதியியல் 98.31
- உயிரியல் 98.47
- கணிதம் 98.88
- விலங்கியல் 97.76
- வணிகவியல் 96.41
- இயற்பியல் 812, வேதியியல் -39,09, உயிரியல் -1494, தாவரவியல் -340, விலங்கியல் -154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- அதிகபட்சமாக கணக்குப்பதிவியலில் 6,573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- கணினி அறிவியல் 4,618, வணிகவியல் 5,678, பொருளியல் - 1706 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.
கலைப்பிரிவுகளில் 81.89 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளன
தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் மொழியில் 100க்கு 100
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 8,544 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்;
- கடந்த ஆண்டு : 23,957
- இந்த ஆண்டு : 32,501
அரசுப்பள்ளி - தனியார் பள்ளி
- அரசு பள்ளிகள் - 89.80%
- அரசு உதவி பெறும் பள்ளிகள் - 95.99%
- தனியார் பள்ளிகள் - 99.08%
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu