10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்பணி இன்று தொடக்கம்

10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்பணி இன்று தொடக்கம்
X
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதேபோல், பொதுத்தேர்வு எழுதும் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெற்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மே 5ல் துவங்கி, மே 28 ம் தேதி நிறைவு பெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ல் தொடங்கி, மே 30 வரை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதில், 11ஆம் வகுப்புக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 9-ம் தேதி ஆரம்பமாகிறது. 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.

இப்பணிகள் நிறைவு பெற்று, 10-ம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்