திருச்சி தேசிய கல்லூரியில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா: கல்வி அமைச்சர் மககேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி தேசிய கல்லூரியில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா: கல்வி அமைச்சர் மககேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
X
திருச்சி தேசிய கல்லூரியில் நடந்த ஓவியப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி தேசிய கல்லூரியில் நடந்த ஓவியப் போட்டி பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா திருச்சி தேசியக் கல்லூரியில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது

நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மற்றும் துணை முதல்வரும் ஆகிய முனைவர் பிரசன்ன பாலாஜி வரவேற்புரை வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன் தலைமை வகித்தார்.

திருச்சி மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்

சாதனைகளும் சரித்திரங்களும் தங்கள் பக்கங்களை இளைஞர்களுக்காக நிரப்புவதற்கு காத்து கிடக்கும் போது இளைய சமுதாயம் போதையின் பாதையில் சிக்கி விடக்கூடாது என்றும்

தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஒற்றையடிப் பாதையில் மட்டுமே தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து எதிர்கால தமிழ்நாடு என்ற அமைப்பினுடைய நிறுவனர் ஆஷிக் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் பங்கேற்கும் கருத்து சித்திரத்தை வெளியிட்டார்

தொடர்ந்து ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடுவர்களாக சிறப்பித்த ஜெயஸ்ரீ நடராஜன், மனோஜ் ஷேக் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் நிறைவாக உடற் கல்வியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பூபதி நன்றியுரை கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil