சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்க ஒரு நாடு ஒரே சந்தா முன்முயற்சி

சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்க ஒரு நாடு ஒரே சந்தா முன்முயற்சி
X
ஏப்ரல் 1 முதல் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பத்திரிகைககளை ஒரு நாடு ஒரு சந்தா மூலம்பெற முடியும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களுக்கான ஒரு சிறந்த செய்தியாக கல்வி அமைச்சகம் ஒரு நாடு ஒரு சந்தா (ONOS) முயற்சியை அறிவித்துள்ளது, இதன் மூலம் ஏப்ரல் 1, 2023 முதல் இந்திய மக்கள் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளின் வெளியீடுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான திறந்த அணுகலைப் பெற முடியும்..

இந்த முன்முயற்சி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமின்றி, நாட்டிலுள்ள அனைவருக்கும் பயனளிக்கும். இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் அலுவலகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது

ONOS இன் முதல் கட்டத்திற்கான முதன்மைக் குழுவால் திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுக் குழு (PEC) 70 வெளியீட்டாளர்களின் கட்டுரைகளை பரிந்துரைத்துள்ளது.

கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ONOS உலகின் பெரும்பாலான முக்கிய STEM வெளியீட்டாளர்கள் மற்றும் தரவுத்தள தயாரிப்பாளர்களுடன் தேசிய உரிமங்களில் கையெழுத்திட விரும்புகிறது, அதன் உள்ளடக்கங்கள் ஏற்கனவே பல்வேறு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் நேரடியாகவோ அல்லது அரசாங்கத்தின் நிதியளிக்கப்பட்ட கூட்டமைப்பு மூலமாகவோ பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது

முதன்மை பயனாளிகள்

அரசு நிறுவனங்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை ONOS மூலம் பயன்பெறும் முதன்மை நிறுவனங்களாக இருக்கும்

மற்ற பயனாளிகள் என கூறுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), அணுசக்தித் துறை (DAE), அமைச்சகம் போன்ற அமைச்சகத் துறைகளின் ஆராய்ச்சி ஆய்வகங்கள். புவி அறிவியல் (MoES), பயோடெக்னாலஜி துறை (DBT), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEiTY), போன்றவை அடங்கும்

மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களின் (CFTIs) இயக்குநர்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில், உயர்கல்வி செயலர் கே.சஞ்சய் மூர்த்தி, "இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு கோரப்படுகிறது. 70 வெளியீட்டாளர்கள் ONOS செயல்பாடுகளுடன் ஒத்திசைக்கப்பட்டுள்ளனர். எனவே, 2023 காலண்டர் ஆண்டிற்கான இந்த 70 வெளியீட்டாளர்களிடமிருந்து மின்-வளங்களைப் புதுப்பிப்பதை, பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த 70 வெளியீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் உட்பட ONOS செயல்பாடுகள் குறித்த குறிப்பிட்ட அறிவிப்புகள் டிசம்பர் 15, 2022 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!