அனைத்து அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஜூலை 25ம் தேதி வரை கோடை விடுமுறை
ஜம்மு நகரில் கோடை மண்டலத்துக்கு கீழான அனைத்து அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஜூலை 25ம் தேதி வரை கோடை விடுமுறை அளிப்பதாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஜம்மு நகரில் ஏப்ரல் மாதத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆனால் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் முறை மூலம் தங்கள் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். காஷ்மீரில் உள்ள பள்ளிகளும், ஜம்முவின் சில பகுதிகளும் குளிர்கால மண்டலத்தின் கீழ் வரும். அவை கிட்டத்தட்ட மூன்று மாத குளிர்கால விடுமுறை மற்றும் ஆண்டுதோறும் 10 நாள் கோடை விடுமுறைக்கு மூடப்படும்.
அதே வேளையில், ஜம்முவில் கோடைகால மண்டல பள்ளிகள் வழக்கமாக ஒன்றரை மாத கோடை விடுமுறையும், மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறிய குளிர்கால விடுமுறையும் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கல்வி அதிகாரிகள் கடந்த திங்களன்று ஜம்மு பிரிவின் கோடை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் 12ம் வகுப்பு வரையில் உள்ள அனைவருக்கும் ஜூலை 25ம் தேதி வரையிலான கோடை விடுமுறை அளிப்பதாக அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாரத்திற்கு ஒரு முறையாவது ஆசிரியர்கள் மாணவர்களின் ஆன்லைன் தொடர்பு இருக்கும் என்றும், கலாச்சார நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு விடுமுறை நாட்களில் வாராந்திர நிகழ்ச்சிகள் மற்றும் மதிப்பீடு தொடர்ந்து நடத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறையின் முதன்மை செயலாளர் பி கே சிங் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu