பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
அண்ணா பல்கலைக்கழகம் - கோப்புப்படம்
பொறியியல் படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழ்நாடு உயர்கல்வித் துறை திட்டமிட்டு, பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக, வரும் 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்கின்றனர்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இன்று நடைபெறும் கல்விக்குழு கூட்டத்தில் பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தைத் தாண்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது குறித்த புதிய அம்சங்கள் இடம் பெறும் என்று,துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
மேலும் இந்த பாடத்திட்டம், நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu