வெளியானது நீட் தேர்வு முடிவு: மாணவர் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைப்பு

வெளியானது நீட் தேர்வு முடிவு:  மாணவர் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைப்பு
X

கோப்பு படம் 

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும், இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதியிருந்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 1.10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இச்சூழலில், இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இத்தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள், நீட் தேர்வின் அதிகாரபூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture