தேசிய மீனவர் நலத்திட்டம்
கடல் ஓடங்களில் வாழ்க்கை ஓட்டும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களில் ஒன்று தேசிய மீனவர் நலத்திட்டம் (National Scheme of Welfare of Fishermen). வீடு கட்டுதல், குடிநீர் வசதி, சமுதாய கூடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், தமிழ்நாட்டிலும் பல மீனவர்களுக்குப் பயனளித்து வருகிறது.
திட்டத்தின் நோக்கங்கள்:
மீனவர்களுக்கு வீடு, சுத்தமான குடிநீர், சமுதாய கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குதல்.
மீனவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
நவீன மீன்பிடிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்துதல்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
வீடு கட்டுதல் திட்டம்: மீனவர்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டம். ஒரு கிராமத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லை. ஆனால், வீடுகளின் அடிப்படை பரப்பளவு 35 சதுர மீட்டர் ஆகவும், செலவு ரூ.75,000 ஐ தாண்டக்கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளன.
சமுதாய கூடங்கள் கட்டுதல்: ஒரு கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால், சமுதாய கூடம் கட்டப்படும். இந்த கூடத்தின் அடிப்படை பரப்பளவு 200 சதுர மீட்டர் ஆகவும், செலவு ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளன. இதில் இரண்டு கழிப்பறைகள் மற்றும் ஒரு கிணறு ஆகியவை அமைக்கப்படும்.
சுத்தமான குடிநீர் வசதி: 20 வீடுகளுக்கு ஒரு கிணறு என்ற விகிதத்தில் கிணறுகள் அமைக்கப்படும். தேவைக்கேற்ப, கூடுதல் கிணறுகளும் அமைக்கப்படும். கிணறு அமைக்க இயலாத இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.
குழு விபத்து காப்பீட்டு: பதிவுசெய்யப்பட்ட மீனவர்களுக்கு விபத்து அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் நிதி உதவி வழங்கும் திட்டம். இதன் மூலம் இறப்புக்கு ரூ.50,000 மற்றும் முழுமையான உடல் ஊனத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும். இந்தக் காப்பீட்டுக்கு மீனவர்கள் ஆண்டுக்கு ரூ.15 செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாகப் பகிந்து கொண்டு செலுத்தும்.
சேமிப்புடன் நிவாரணத் திட்டம்: மீனவர்களிடமிருந்து 8 மாதங்களுக்கு மாதம் ரூ.75 சேமிக்கப்படும். இதற்கு இணையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா ரூ.300 வீதம் வழங்கி, மீனவர்களின் வருமானம் குறைவாக இருக்கும் காலங்களில் நிதியுதவி வழங்கி வருகிறது.
திட்டத்தின் தகுதி:
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மற்றும் மாநில அரசால் அனுமதி பெற்ற மீனவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
உள்நாட்டு மீனவர்களுக்கு 60 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
ஏழ்மை நிலையில் (BPL) உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
முழுநேர உள்நாட்டு மீன்பிடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
கடல் மீனவர்களுக்கு முழுநேர கடல் மீன்பிடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
மாநில அல்லது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மீனவர் சங்கம், கூட்டமைப்பு அல்லது கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
FISHCOPFED மூலம் காப்பீட்டுப் பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
திட்டத்தில் விண்ணப்பிக்கும் முறை:
மாநில மீன்வளத்துறை அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்: விண்ணப்ப படிவம், புகைப்படம், படகு பதிவு சான்று, தற்போதைய வலை உரிமம் செலுத்திய ரசீது, தொழில் மற்றும் குடியிருப்பு சான்று, ரேஷன் கார்டு நகல், வருமான சான்று, புகைப்படம்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் தேசிய மீனவர் நலத்திட்டம் குறிப்பிடத்தக்கூந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மீனவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது. எனவே, தகுதியுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu