சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான உலக அளவிலான தரவரிசை பட்டியல்-பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான  உலக அளவிலான தரவரிசை பட்டியல்-பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம்
X

பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்சி.- ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம்

லண்டன் நிறுவனம்- சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான உலக அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் இந்திய கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளது.

சிறந்த கல்வி நிறுவங்களுக்கான உலக அளவிலான தரவரிசை பட்டியல்-பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது.

லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சிறந்த கல்வி நிறுவங்களுக்கான உலக அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளது.

லண்டனை சேர்ந்த 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்'என்ற ஆய்வு நிறுவனம் (QSUniversity Rankings)உலக அளவிலான உயர்கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைகளின் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. தற்போது 2022ம் ஆண்டிற்கான பல்கலைகளின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 200 பல்கலைகளின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து 10 வருடங்களாக 'மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனம் இந்த ஆண்டு 177வது இடத்தில் உள்ளது. மேலும், டெல்லியை சேர்ந்த ஐஐடி நிறுவனம் கடந்த ஆண்டு 193 வது இடத்தை பிடித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 185 வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., அதாவது 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' நிறுவனம், பட்டியலில் 186வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் இந்த நிறுவனம் சிறந்த ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆராய்ச்சிக்கான பட்டியலில் கவுஹாத்தி ஐ.ஐ.டி., நிறுவனம், 41வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களுக்கு நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் டிவீட்டர் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இதேபோல் பல இந்திய கல்வி நிறுவனங்கள் உலக அளவில் சிறப்படைய முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினார்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!