பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்த முதல்வருக்கு கடிதம்
முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த குழுவின் கூட்டமானது மாதம் ஒருமுறை நடைபெற வேண்டும் என்பது அரசு விதிமுறை ஆகும். ஆனால் மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்களின் வேலைப்பளு அதிகரிக்கப்படுவதாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை ஏற்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்தலாம் முடிவு செய்து உள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வசந்தி தேவி (நெல்லை மீனாட்சி சுந்தரம் பிள்ளை பல்கலைக்கழகமுன்னாள் துணைவேந்தர்),செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள ஒரு கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கு அன்பு வணக்கம்.மதிப்புமிகு தலைமைச் செயலர்,முதன்மைச் செயலர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
இதுவரை மாதம் ஒரு முறை, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்று வந்தது . இனி,மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்துவது என்ற அரசு முடிவெடுத்துள்ளதாக அறிந்தோம். இந்த முடிவை அரசு கைவிட்டு, மீண்டும் மாதம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை நடத்த வழிவகை செய்ய வேண்டுகிறோம்.இதற்கான கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.தாங்கள் இதை அக்கறையுடன் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu