உங்களுக்கு லீவ் லெட்டர் எழுத தெரியுமா? தெரியலைன்னா முதல்ல இதைப் படியுங்க...

உங்களுக்கு லீவ் லெட்டர் எழுத தெரியுமா?  தெரியலைன்னா முதல்ல இதைப் படியுங்க...
X
Leave Letter For Tamil - தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டு இன்றளவில் ஒருசிலருக்கு தமிழ் மொழியே எட்டாக்கனியாக இருப்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. அப்படி எழுதினாலும் பிழைகளோ பிழைகள்...என்ன செய்ய?




Leave Letter For Tamil -உடல்நிலை சரியில்லாததால் விடுப்புக்கான விண்ணப்பம் (மாதிரி-பைல்படம்)


வாழ்க்கையில் நாம் கற்கும் கல்வி என்பது முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல. நம் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடியதே கல்வி. அதற்குதான் '' பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது'' என சொல்லிவிட்டுசென்றார்களோ தெரியலைங்க..நீங்கள் கற்ற கல்வி நீங்கள் இறக்கும் வரை உங்களுக்கு கை கொடுக்கும் என்பதை யாராலும் உடனே மறுத்துவிட முடியாது.

அந்த வகையில் நாம் கற்கும் காலத்தில்நன்றாக கற்றிருந்தால் நாம் இன்று இருக்கும் நிலையே வேறு என எத்தனைபேர் பிதற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா உங்களுக்கு? வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் மட்டும் திரும்பவே வராதுங்க...ஒண்ணு உயிர்...இரண்டாவது போன நேரம், காலம்,,, மூன்றாவது உதிர்த்த வார்த்தைகள்... இதனை நீங்கள் மனதில் பதிந்து விட்டால் அழிக்க முடியாது. கோபத்தில் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் திரும்ப பெறமுடியுமா? ...யோசிச்சு பாருங்க...

இக்கால இளைஞர்கள் அனைவருமே ஏதோ பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள் என பொதி சுமையாக பாடப்புத்தகத்தினை துாக்கிக்கொண்டு பள்ளி, கல்லுாரிகள் செல்கிறார்களே தவிர அவர்கள் மனதோடு ஒன்றி படிக்கிறார்களா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எல்லாம் மார்க் வாங்கும் இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை. அக்காலக் கல்வி எல்லாம் மனனமாக இருக்காது. புரிந்து அறிந்து படித்தார்கள். இதனால் அவர்கள் இளவயதில் கற்றது கூட இப்போது கேட்டாலும் வரி பிசகாமல் சொல்வார்கள். ஆனால் இப்போது படிக்கும் தலைமுறையினர் அவர்கள் படிப்பது எல்லாமே அந்த தேர்வு வரை மட்டுமே ஞாபகத்தில் இருப்பதால் அவர்களுக்கு வாழ்க்கைக்கு உதவுகிறதா? என்பது சந்தேகமே.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு மொழிப்பாடம் தமிழ் கற்பது என்றால் எட்டிக்காயாக கசக்கிறது. தமிழ் பாட வேளையில் ஆசிரியர்கள் ஏதோ வந்து அவர்கள் சிலபஸை முடிக்க நடத்திவிடுவார்கள். இவர்கள் அதனை ஒழுங்காக கவனிப்பதில்லை. எதை வைத்துசொல்கிறோம் என்றால் யாருக்கும் இன்றும் ஒரு பக்க கடிதம் ஒழுங்காக பிழையில்லாமல் தமிழில் எழுதத்தெரியாது. எங்காவது ஒரு எழுத்துப்பிழை கண்டிப்பாக இருந்தே தீரும். அதுவே ஆங்கில மீடியத்தில் படிப்போருக்கு ஆங்கிலம் எளிதில் வரும். என்ன செய்ய? இவர்கள் வாங்கிவந்த வரம் அதுபோல் உள்ளது? அரசு பள்ளியில் ஆங்கிலம் தான் அவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும்.

எதைவைத்து சொல்கிறோம் என்றால் தமிழில் லீவ் லெட்டர் எழுதுவது என்பது அடிமட்ட வகுப்புகளிலேயே நமக்கு பாடமாக வந்தது. ஆனால் இன்றும் பலருக்கு இதை எழுததெரிவதில்லை எனும்போது மனம் கனக்கத்தான் செய்கிறது. வாசிப்பு திறன் இல்லாததே இதற்கெல்லாம் காரணம் என்று கூட சொல்லலாம். வாசித்தால் எழுத்துகள் மனதில் பதியும்.சரி பார்ப்போம் வாங்க...எப்படி எழுதுவது என்று?

சாதாரணமாக விடுப்பு விண்ணப்பம் எழுதுவது என்பது பெரிய வேலை அல்ல. மிகவும் எளிதானது. அதனை உரிய வார்த்தைகளை உபயோகப்படுத்தி எளிதில்புரியும்படி ரத்தின சுருக்கமாக எழுதுவதில்தான் அவரவர்களின்திறமையானது அடங்கியுள்ளது.

பள்ளி, கல்லுாரி முடித்தவர்கள் கூட முக்கியமான தருணங்களில் விடுப்பு விண்ணப்பம் எழுதும்போது சிக்கல் வந்துவிடுகிறது. அதுவும் மாணவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரிகிறது.

விடுப்பு கடிதம் எழுதுவதற்கு முறை இருக்கிறது. விடுப்பு கடிதம் எழுதும்போது விடுப்புக்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். பள்ளி ஆசிரியருக்கோ, பள்ளி முதல்வருக்கோ மற்றும் நிர்வாக இயக்குனருக்கு நீங்கள் எழுதும் விடுப்பு விண்ணப்பக் கடிதம் மரியாதைக்குரியதாகவும் அதே சமயம் உங்கள் பணிவையும் காட்டுவதாக இருக்க வேண்டும். . விடுப்புக்கடிதத்தில் முக்கிய விஷயங்களை மட்டும் எழுத வேண்டும் தேவையற்ற விஷயங்களை குறிப்பிடக்கூடாது.

கடிதத்தின் பொருளானது நேரடியாகவும் தெளிவாகவும் எழுதப்பட வேண்டும். உங்கள் விடுப்புக்கடிதத்தை அனுப்பும் நபரின் முகவரியை முதலில் எழுதவேண்டும். பின்னர் யாருக்கு விடுப்புக்கடிதம் எழுதுகிறீர்களோ அவருடைய முகவரியை பெறுதலில் எழுதவேண்டும். பின்னர் அய்யா, எனக்குறிப்பிட்டுவிட்டு பொருளில் காரணத்தினை சிறுகுறிப்பாக எழுதிவிடவேண்டும்.

கடிதத்தின் மையத்தில் நீங்கள் விடுப்பு எடுப்பதற்கான காரணத்தினை எளிதில் புரிந்துகொள்ளும்படி தெளிவாக எழுதிவிடவேண்டும்.மருத்துவ விடுப்பாக இருந்தால் மருத்துவ சான்றிதழின் அசலை விடுப்பு கடிதத்துடன்இணைக்கவேண்டும். பின்னர் இடது புறம் இடம், நாள் குறிப்பிட்டுவிட்டு வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள என குறிப்பிட்டு விண்ணப்பம் செய்யும் நபர் கையெழுத்திடல்வேண்டும்.இவ்வளவு தாங்க விடுப்பு விண்ணப்பம். புரிந்துகொண்டால் ரொம்ப ரொம்ப சுலபம்தாங்க... புரியணுமே...

மாதிரி விடுப்பு விண்ணப்பம்

அனுப்புனர்

உங்கள் பெயர்

பயிலும் வகுப்பு

பள்ளி, கல்லுாரியின் பெயர்...

ஊர்.

பெறுநர்

உயர்திரு. பள்ளி, கல்லுாரி வகுப்பாசிரியர்

பயிலும் வகுப்பு,

பள்ளி, கல்லுாரி பெயர்,

ஊர்

மதிப்பிற்குரிய அய்யா/அம்மா,

பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

நாளை எங்கள் குடும்பத்தில் அனைவரும் திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்லவிருப்பதால் எனக்கு 3 நாட்கள் தொடர்ந்து ( தேதியைக் குறிப்பிட வேண்டும்)அதாவது திங்கள், செவ்வாய். புதன் ஆகிய 3 நாட்களும்விடுப்பு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: இப்படிக்கு

நாள்: தங்கள் உண்மையுள்ள,


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil