/* */

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அறிமுகம்

இனி விண்ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்-TNPSCசெயலாளர் மகேஸ்வரி தகவல்

HIGHLIGHTS

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அறிமுகம்
X

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அறிமுகம் !

இனி விண்ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலாளர் மகேஸ்வரி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தேர்வு முடிவுகளை துரிதப்படுத்தும் பொருட்டு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி –- I, II, மற்றும் IV பணிகளில் அடங்கிய பதவிகள் நீங்கலாக மற்றைய அனைத்தும் நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணைய வழியில் விண்ணப்பம் செய்வதில் கீழ்காணும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

1.விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்பொழுதே அவர்களால் இணையவழி விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள்/ உரிமை கோரல்களுக்கு ஆதாரமான அனைத்துத் தேவையான சான்றிதழ்களையும் இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2.விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பித்தினை சமர்ப்பிக்கும்பொழுதே அனைத்து ஆதார சான்றிதழ்களையும் / ஆவனணங்களையும் பிடிஎப் வடிவத்தில் அதாவது (ஒன்று அல்லது பல பக்கங்கள் கொண்ட) 200கேபிக்கு மிகாமல் உள்ள ஒரு பிடிஎப் ஆவணமாக ஒவ்வொரு உரிமை கோரலுக்கும் ஆதாரமாக கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3.பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் / சான்றிதழ்கள் குறித்த தகவல்கள் நேரடி நியமனங்களுக்காக தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளில் காணப்பெறலாம்.

1. விண்ணப்பதாரர் இ-சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே, இனி வரும் காலங்களில் தேர்வாணையத்தின் அறிவிக்கைகளின் அடிப்படையில் விண்ணப்பிக் விரும்பும் அனைத்து தேர்வர்களும் தங்களது சான்றிதழ்கள் அனைத்தையும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய ஏதுவாக முன்னரே ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

2.பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர் தங்களது ஒருமுறை பதிவின் மூலம் சாிபார்த்து ெகாள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சான்றிதழ்கள் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் விண்ணப்பித்திருந்த பதிவிற்கான தேர்வு அனுமதி சீட்டினை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நாளுக்கு இரண்டு நாள்கள் முன்னர் வரை (அதாவது, தேர்வு நடைபெற உள்ள தேதிக்கு 12 நாள்கள் முன்னர் வரை) சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய/மறு பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

3.ஆவணங்களை பதிவேற்றம் செய்ததற்காக நிர்ணயிக்கப்பட்ட நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேவையான ஆதார ஆவணங்களை (சரியாகவும்/தெளிவாகவும்/படிக்கக்கூடியதாகவும்) பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரரின் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

4.எழுத்து தேர்விற்கு பின்னா் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது முற்றிலும் விண்ணப்பதாரர்களில் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் /ஆவணங்களின் அடிப்படையிலேயே அமையும். எழுத்து தேர்விற்கு பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும் தேர்வாணையத்தால் அனுபப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் /ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் அதிக அக்கறையுடனும் எச்சாிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதுதொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக விளக்கம் தேவைப்படின் helpdesk@tnspcexams.in/ grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தேர்வாணையத்தின் 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Updated On: 29 March 2022 4:08 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!