புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு

புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை அருகே கடலில் 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடற்கரை பகுதியில் பலத்த காற்றும் வீசியது.

இதன் காரணமாக சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக் காடானது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். நேற்று இரவில் இருந்து மழை பெய்யவில்லை என்றாலும் ஏற்கனவே பெய்த மழையின் தாக்கம் என்னும் குறையவில்லை .அதாவது மழை நீர் தெருக்களில் இருந்தும் முக்கிய சாலைகளில் இருந்தும் வடியவில்லை.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் சென்னையை மிரட்டிய மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் வசூலிப்பட்டினம் இடையே இன்னும் சில மணி நேரங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பலத்த மழையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் மற்ற மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பாதிப்பு இருப்பதாலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கலாமா? என பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முதலமைச்சரின் அனுமதி பெற்று இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story