அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு
X
கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு ஜூன் 1 தொடங்குகிறது

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சத்து 14666 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் வாரியாக விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சத்து 7395 மொத்த இடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நாளை (25-ம் தேதி) அனுப்புகிறது. அதனை கல்லூரி முதல்வர்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டி வெளியிடுவார்கள். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலைக் கல்லூரிகளுக்கும் தனித்தனியாக தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும்.

இதையடுத்து 29-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. 31-ம் தேதி வரை மூன்று நாட்கள் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு இக்கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 1- முதல் 10 வரை முதல் பொது கலந்தாய்வு நடக்கிறது. 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாவது கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி