பம்பாய், சென்னை ஐஐடிக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க ஃபெட்எக்ஸ் உறுதி
பைல் படம்
பம்பாய் ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க ஃபெட்எக்ஸ் உறுதியளித்துள்ளது.
ஃபெட்எக்ஸ் கழகத்தின் துணை நிறுவனமும், உலகின் மிகப்பெரிய அதிவேக டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஃபெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களான பம்பாய் ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், திறமையைப் பயன்படுத்துதல், நிலைத்தன்மை, தொடக்க நிறுவன வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஃபெட்எக்ஸின் பொறுப்புணர்வை இந்தக் கூட்டுமுயற்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு ஐஐடி வளாகங்களிலும் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் 'உயர் சிறப்பு மையத்தை' உரிய உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைக்க இந்த முன்முயற்சி தனது பங்களிப்பை வழங்கும். ஆற்றல்மிக்க திறமையான நபர்களை ஊக்கப்படுத்துவதுடன் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்துதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை திட்டங்களுக்கு உதவுதல், சுற்றுச்சூழலை தீவிரமாக ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த உயர்சிறப்பு மையம் முன்னிலை வகிக்கும்.
இந்த முன்முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஃபெட்எக்ஸ் கழகத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியம், "விநியோக தொடர்களை அனைவருக்கும் உகந்த வகையில் சிறப்புடையதாக மாற்ற ஃபெட்எக்ஸ்-ஐச் சேர்ந்த நாங்கள் விரும்புகிறோம். போக்குவரத்து சூழலை மாற்றியமைப்பதைத் தாண்டி, நமது சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உறுதிபூண்டிருக்கிறோம். இந்த இலக்குகளை அடையும் வகையில் இந்த மதிப்புமிக்க நிறுவனங்களுடன் எங்களது ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
பம்பாய் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் சுபாசிஸ் சௌத்ரி கூறுகையில், ஃபெட்எக்ஸ் உடனான எங்களது ஒத்துழைப்பு அதிநவீன வழங்கல் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் குறிப்பிடத்தக்க செயலாகும். விநியோகச் தொடர்களின் டிஜிட்டல் மாற்றம், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு போன்ற மிக முக்கியமான சில சவால்களை எதிர்கொள்ளும் இந்த முயற்சி தொலை நோக்கில் ஆழமான தாக்கத்தை உருவாக்கும்" என்றார்.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “தொழில்நுட்பத்தையும் திறமையையும் ஒன்றிணைத்து நீடித்த போக்குவரத்தை இயக்குவதற்கான மையத்தை ஃபெட்எக்ஸ் உடன் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். செயல்பாட்டு ஆராய்ச்சி, நெட்வொர்க் திட்டமிடல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, செயல்திறன் அதிகரிப்பு, உத்தி சார்ந்த திட்டமிடல் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நீடித்த தளவாடப் போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.
சென்னையில் நாளை சணல் கண்காட்சி
சணல் பொருட்கள் மேம்பாட்டுக்காக கண்காட்சி, சணல் வடிவமைப்பு போட்டி, வாங்குவோர் – விற்போர் சந்திப்பு, ஆடை அலங்காரப் போட்டி, கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தேசிய சணல் வாரியம் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களான சணல் பொருட்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சணல் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கவும் சென்னையில் சணல் கண்காட்சி நாளை (13.12.2023) தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியைத் தமிழக அரசின் வேளாண் துறை ஆணையர் டாக்டர் எல் சுப்ரமணியன் தொடங்கிவைக்கிறார்.
தேசிய சணல் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் வாழ்க்கைமுறைக்கு உகந்த, மற்றும் அலங்கார சணல் பொருட்கள் இடம்பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu