பாண்டிச்சேரி பல்கலை.,யில் முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர சி.யு.இ.டி (பிஜி) - 2023 க்கு விண்ணப்பிக்க , கடைசி தேதி மே 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வு சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-இன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பத்தளம் 20.03.2023 முதல் திறக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் கல்வியாண்டிற்கான முதுகலைப் பட்டம் / பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சியுஇடி (பிஜி) – 2023-க்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்புகளின் தகுதித் தேவைகளை கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும் https://www.pondiuni.edu.in/admissions-2023-24/. என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய தேவையான தேர்வு தாள் குறியீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் https://cuet.nta.nic.in/ என்னும் என்.டி.ஏவின் வலைத்தளத்தைத் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க, கடைசி தேதி மே 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu