'' பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது'' வாசகங்களை படிங்க...

Education Quotes in Tamil-கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பன போன்ற வாசகங்கள் கல்வியின்பெருமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.இளமையில் கல் என்பார்கள். அதனைப்பற்றி பார்ப்போம்.

Education Quotes in Tamil

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு." என்றார் ஔவை, இதை விட சிறப்பாக கல்வியின் மேன்மையை யாராலும் விளக்க முடியாது.இன்றைய கல்வியானது, அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையோ, மனஉறுதியையோ மாணவர்களுக்கு வழங்கவில்லை. கல்வித் துறை அறியாமையின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதுஎன சாய்பாபா தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது நாம் வாழுங்காலத்து பயிர். அப்படீன்னா என்னங்க..ன்னு கேட்கறீங்களா... ஆமாங்க நாம் கற்ற கல்வியானது நாம் வாழும் வரை நமக்கு துணை நிற்ககூடியது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.. காரணம் அவனது கல்வியறிவு. கல்வி கற்றவர்கள்இவ்வுலகில் எங்கு செ ன்றாலும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. அதனால்தான் உலகம் முழுக்க நம் தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இளமையில் கற்றுவிட வேண்டும். ஆனால் பலர் அக்காலத்தில் விளையாட்டு தனமாக இருந்துவிட்டு காலம் போன பின்னர் வருந்தி என்ன பயன். அக்கால கல்வி முறை சிறப்பானது எ ன்று கூட சொல்லலாம். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான மரியாதை, பணிவு எனஇருந்தது. ஆனால் காலப்போக்கில் இவையெல்லாம் அடியோடு மாறிவிட்டன.கல்வி யானது ஒருவனை செம்மைப்படுத்துகிறது. நல்வழிப்படுத்துகிறது..மனிதனாக உலா வர உதவுகிறது.

உங்களுக்கு தெரியுமா? குட்டுப்பட்டாலும் மோதிரக் கைகளால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் அக்கால ஆசிரியர்கள் சரியாக படிக்காத மாணவர்களுக்கு தரும் தண்டனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதுவும் தலையில் கொட்டினால் ணங்.. என்று ஒரு சத்தம் மட்டுமே வரும். ஏன் ஒருசிலருக்கு மண்டையே புடைத்துக்கொள்ளும். அதுவும் அக்காலத்தில் பெற்றோர்கள் கண், காது தவிர மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடிங்க.. என சொல்லி பையன்களை பள்ளியில் விட்டுச்சென்ற காலமும் உண்டு.

ஆனால் இப்போது நிலைமையோ தலைகீழாக மாறிவிட்டது. கற்பிக்கும் ஆ சிரியர்கள் மாணவர்களுக்குபயப்பட வேண்டிய கட்டாயத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடித்தால் ஆசிரியர் சஸ்பெண்ட். ஏங்க... பையனுக்கு அரசு இவ்வளவு சலுகை கொடுத்தால் எப்படிங்க படிப்பானுங்க... கல்வியின் சிறப்பு குறித்த வாசகங்களை காண்போம் வாங்க..


கற்றலைப் பற்றிய அழகான விஷயம்என்னவென்றால்

அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. --பி.பி. கிங்

கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். --சாணக்யா

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். --விக்டர் ஹ்யூகோ

ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. --டிசிடெரியஸ் எராஸ்மஸ்

கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். --லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன்

இந்த உலகைத் திறப்பதற்கான சாவி கல்வி, சுதந்திரத்திற்கான கடவுச்சீட்டு கல்வி. --ஓப்ரா வின்ஃப்ரே

கல்விக்கு முடிவே இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, முடிப்பதல்ல கல்வி. நீங்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை, முழு வாழ்க்கையும், ஒரு கற்றல் செயல்முறையே. --ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

ஒரு மனிதன் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைப்பதைக் கற்றுக்கொள்வது சாத்தியமற்றது. --எபிக்டெட்டஸ்

ஒருவர் பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது. --ஆலன் ப்ளூம்

கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவைத் திறப்பதற்கான சாவியாகும். --ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

கல்வியானது படிக்கத்தெரிந்த, ஆனால் படிக்கத் தகுந்தவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒரு பரந்த மக்களை உருவாக்கியுள்ளது. --ஜி. எம். ட்ரெவெலியன்

படித்ததை பிரதிபலிக்காமல் படித்துக்கொண்டே இருப்பது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைப் போன்றது. --எட்மண்ட் பர்க

கல்வியின் உயர்ந்த நோக்கம் அறிவு அல்ல செயல். --ஹெர்பர்ட் ஸ்பென்சர்

கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும். --மால்கம் ஃபோர்ப்ஸ்

எல்லாப் பதில்களையும் தெரிந்து கொள்வதை விட, சில கேள்விகளை தெரிந்து கொள்வது சிறந்தது. --ஜேம்ஸ் தர்பர்

கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை. --அரிஸ்டாட்டில்

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. --நெல்சன் மண்டேலா

தகவல் ஒரு அறிவு அல்ல. அறிவின் ஒரே மூலம் அனுபவம் மட்டுமே. ஞானத்தை அடைய உங்களுக்கு அனுபவம் தேவை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அறிவை விட கற்பனை முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. --ஜோசப் ஸ்டாலின்

சிலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே கல்வி கற்கிறார்கள். மற்றவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பார்கள். --மார்க் ட்வைன்

கற்றலை நிறுத்தும் எவரும், இருபது அல்லது எண்பது வயதினராக இருந்தாலும் வயதானவரே. கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயம் உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான். --ஹென்றி ஃபோர்ட்

ஒரு மனிதனின் உண்மையான கல்வி அவன் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே தொடங்குகிறது. உண்மையான கல்வி ஒழுக்கமான வாழ்க்கையின் மூலம் பெறப்படுகிறது. --ஹென்றி ஃபோர்ட்

தங்களின் தெரிவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யத் தயாராக இல்லாவிட்டால் ஜனநாயகம் வெற்றிபெறாது. எனவே ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு அரண் கல்வி. --பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்

கல்வி இல்லாத பகுத்தறிவு, பகுத்தறிவு இல்லாத கல்வியை விடச் சிறந்தது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

கற்றுக் கொண்டே இருக்கும் வரை உங்களால் இளமையாக இருக்க முடியும். --எமிலி டிக்கின்சன்

குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் அபிவிருத்தியடைய முடியாது. --நெல்சன் மண்டேலா

வாசித்தல் மற்றும் மேலும் மேலும் அதிக அறிவைப் பெறுதலை விட சிறந்தது எதுவும் இல்லை. --ஸ்டீபன் ஹாக்கிங்

கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை. --சேகுவேரா

கல்வி இல்லாத மேதை சுரங்கத்தில் உள்ள வெள்ளி போன்றவர். --பெஞ்சமின் பிராங்க்ளின்

அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும். --ஜேம்ஸ் மேடிசன்

எனது மாணவர்களுக்கு நான் ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறேன். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே செல்ல வேண்டும். --சீன பழமொழி

நீங்கள் நாளையே இறந்துவிடுவீர்கள் என்பது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்பது போல கற்றுக்கொள்ளுங்கள். --மகாத்மா காந்தி

அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியைக் கொடுக்கும். --பெஞ்சமின் பிராங்க்ளின்

தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம். --ஜான் ஹெர்சி

கல்வி இல்லாத குழந்தை சிறகு இல்லாத பறவை போன்றது. --திபெத்திய பழமொழி

கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது. --ஜார்ஜ் வாஷிங்டன்

நல்ல கல்வியின் மூலம் தான் உலகில் உள்ள அனைத்து நன்மைகளும் உருவாகின்றன. --இம்மானுவேல் கான்ட்

அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும். --சாய் பாபா

நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். --சாய் பாபா

பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. --சாய் பாபா

இன்றைய கல்வி முறை கற்றவரை சுயநலவாதியாக்குகிறது. அந்த நபரை புலன்களுக்கு அடிமையாக்குகிறது. அதன் விளைவாக அந்த நபர் தனது தெய்வீக தன்மையை மறந்து விடுகிறார். --சாய் பாபா


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story