சிப்பெட் நிறுவனத்தில் முதுநிலை பட்டயம் மற்றும் பட்டய படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்)
இந்திய அரசின் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்), பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர், நுழைவு தேர்வு ஏதும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல அறிவியல் துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டு கால முதுநிலை பட்டயத்தில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சி மேற்கொள்ள நேரடி சேர்க்கையில் பங்கு பெற்று அனுமதி பெறலாம்.
நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி வரும் ஜூலை 31, 2023 ஆகும். பயிற்சியை நிறைவு செய்பவர்கள் ரிலையன்ஸ், டி.வி.எஸ் குழுமத்தின் தொழிற்சாலைகள், சாம்சங், ஹூண்டாய், சுப்ரீம், பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை சிப்பெட் நிறுவனம் உருவாக்கும். இது தவிர, 12-ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வியைத் தொடர முடியாதவர்கள், மூன்றாண்டு கால பட்டய படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் இரண்டாம் ஆண்டில் அனுமதி பெற்று வேலைவாய்ப்பையும் பெற முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு 9360098600/ 9600254350 என்ற அலைபேசி எண்ணையோ அல்லது chennai@cipet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.
சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மற்றும் தலைவர் திரு சூ. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu