கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மருந்தியல் துறை
இந்திய மருந்து தயாரிப்பு தொழில்துறையை, தரமான மருந்து தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதுடன், நாட்டில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைப்பதையும், போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதையும் உறுதி செய்வதே மருந்தியல் துறையின் தொலைநோக்காகும். ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துகிறது மருந்தியல் துறை.
இதற்காக நாடு முழுவதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, 7 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்கள் (NIPER) ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் தரமான கல்வியை வழங்கி வருகின்றன. NIPER நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும், மத்திய அரசின் ரசாயன உர அமைச்சகத்திற்கு உட்பட்ட மருந்தியல் துறை, தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 'மருந்துப்பொருள் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை' வெளியிட்டுள்ளது.
இத்தகைய கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், தொழில்முனைவோர் ஆவதை இந்த வழிகாட்டு நெறிமுறை ஊக்குவிக்கிறது. இதேபோன்று வெற்றிகரமான தொழில்நுட்பங்கள், மருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதுடன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கும் இந்த வழிகாட்டு நெறிமுறை உதவுகிறது என ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu