சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ளது
நடப்பு கல்வியாண்டிற்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் 2 பருவங்களாக பிரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என சி.பி.எஸ்.சி. தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் ஏற்கனவே இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இரண்டு பருவத்திற்கும் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் 50 சதவீதமாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்களை www.cbscacademic.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu